பயங்கரவாத குற்றச்சாட்டு பொய்யானது

பயங்கரவாத குற்றச்சாட்டு பொய்யானது

12 July 2019 11:42 am

டொக்டர் சஹாப்டீன் சாபீ குறித்த பயங்கரவாதக் குற்றச்சாட்டு பொய்யானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

டொக்டர் சாபீயை தடுத்து வைத்திருப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட மூன்று மாத கால தடுப்புக் காவல்  உத்தரவு ரத்தாகின்றது எனவும் சட்ட மா அதிபர் திணைக்களம் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

குருணாகல் நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு தொடர்பிலும் டொக்டர் சாபீக்கு எதிராக வழக்குத் தொடர போதியள சாட்சியங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.