ஜனாதிபதி தேர்தல் பற்றி தற்போதைக்கு பேச வேண்டியதில்லை
Wednesday, 05 Aug 2020

ஜனாதிபதி தேர்தல் பற்றி தற்போதைக்கு பேச வேண்டியதில்லை

18 June 2019 11:07 am

ஜனாதிபதி தேர்தல் பற்றி தற்போதைக்கு பேச வேண்டியதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது குறித்து தற்போதைக்கு கருத்து வெளியிட வேண்டாம் என அவர் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பற்றி அறிவிக்கப்படாத நிலையில் ஒவ்வொரு நபர்களும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்.

2015ம் ஆண்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இந்த தருணத்தில் உசிதமானது எனவும், ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.