எழுத்தாளர் சாக்திகவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள ICCPR
Tuesday, 10 Dec 2019

எழுத்தாளர் சாக்திகவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள ICCPR

17 June 2019 11:39 am

 பிரபல எழுத்தாளர் ஷாத்திக்க சத்குமார முகநூலில் சிறுகதை ஒன்றை பதிவிட்டமைக்காக சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைப் பிரகடன சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு கடந்த 78 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று தொடர்பில் ஊடகவியலாளர் குசல் பெரேராவிற்கு எதிராகவும் இந்த பிரகடனத்தின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிங்கள பௌத்த தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திவயின பத்திரிகையின் செய்தியாளர் ஹேமந்த ரந்துனுவிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கான தகவல்களை வழங்கிய குருணாகல் பிராந்திய செய்தியாளர் புஸ்பகுமார ஜயரட்ன போன்றோருக்கு எதிராகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மருத்துவர் சாபீ கருத்தடை சத்திரசிகிச்சை எதனையும் மேற்கொள்ளவில்லை என 69 தாதிமார் சாட்சியமளித்துள்ளனர், இவர்கள் அனைவரும் தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றா திவயின செய்தித் தாளுடன் தொடர்புடையவர்கள் கூறுகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இனவாத அடிப்படையில் செய்திகளை வெளியிடுவோருக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனினும், பொதுவெளியில் நியாயமான உண்மைகளை பதிவிட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.