கொரோனா சமூக பரவல் இல்லை - அடையாளம் காணப்படுபவர்கள் செவ்வாய் கிரகத்தை சேர்ந்தவர்கள்
Friday, 24 Sep 2021

கொரோனா சமூக பரவல் இல்லை - அடையாளம் காணப்படுபவர்கள் செவ்வாய் கிரகத்தை சேர்ந்தவர்கள்

24 October 2020 12:23 pm

நான் முதலில் இத்தாலியில் இருந்து வந்தவர்களிடம் கோபப்பட்டு  தவறு அவர்களுடையது என்றேன்.

நான் பின்னர் கடற்படை அதிகாரிகளின் பக்கம் திரும்பி தவறு அவர்களுடையது என்றேன்.

முஸ்லிம் கிராமங்கள் கொவிட்டை பரப்புகிறது என கோபப்பட்டு தவறு அவர்களுடையது என்றேன். 

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள்  தொற்றுநோய்களைக் கொண்டுவருவதாகக் கூறி திட்டிதீர்த்து தவறு அவர்களுடையது என்றேன்.  

பிராண்டிக்ஸ் பணிப்பெண்கள் எனது தேசத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர் என கூறி தவறு அவர்களுடையது என்றேன்.  

மீன் விற்பனையாளர்கள் மீனுக்கு பதிலாக கொவிட் விற்பனை செய்கிறார்கள் என குறைகூறி தவறு அவர்களுடையது என்றேன்.  

இறுதியில் கொரோனா என்னை தேடி வந்தது  

நான் எனக்கே விரலை நீட்டினேன்
எனக்கு திட்டி தீர்க்க யாரும் மீதமாக இருக்கவில்லை... 

- மார்ட்டின் நீமோலரின் பேரன் 

- மொழிபெயர்ப்பு கிருஷாந்தி கருப்பையா (Krishanthi Karuppiah) 

KK