அமேசான் நம்பர் 1 தேசிய இலவங்கப்பட்டை தயாரிப்பு இலங்கை சுங்கத்தில் சிக்கிய விதம்
Saturday, 15 Aug 2020

அமேசான் நம்பர் 1 தேசிய இலவங்கப்பட்டை தயாரிப்பு இலங்கை சுங்கத்தில் சிக்கிய விதம்

20 January 2020 09:02 am

காலி - தவலம பிரதேசத்தில் இயங்குகின்ற உலகின் நம்பர் வன் மற்றும் சர்வதேச சந்தையில் நம்பர் 1 இலவங்கப்பட்டை தூள் உற்பத்தியாக இருந்த டி குவானசுவேஸ் நிறுவனத்தின் பட்டை தயாரிப்பு சர்வதேச சந்தையில் இருந்து இப்போது 5 மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகள் " விசாரணை செய்வதாக கூறி" இந்த தேசிய வணிகத்திற்கு செய்து கொண்டிருக்கும் இழப்பீடு 300 மில்லியனுக்கும் அதிகமாகும்.

'Organic Ceylon Cinnamon Powder' எனும் இந்த ஆர்கானிக் இலவங்கப்பட்டை தூள் உற்பத்தி தியெஸ்ட்டா பிராண்ட்டுடன் 5வருட காலமாக அமேசான் இணையதளத்தில் நம்பர் வன் தயாரிப்பாக உள்ளது. இருப்பினும் தற்போது இந்த கெளரவம் இலங்கைக்கு இல்லாமல் போயுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பு இலங்கை சுங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கை மற்றும் லேபிளைப் படிக்க தெரியாத அதிகாரி.

2019 ஆகஸ்ட் 7ம் திகதி இந்த நிறுவனத்தினால் அமெரிக்காவின் சிகாகோ நகரிற்கு அனுப்ப தயாராக இருந்த 20,000 இலவங்கப்பட்டை பைகள் அடங்கிய சரக்கை (shipment) கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டது எவ்வித காரணமும் அறிவிக்காத நிலையிலே. பல வாரங்களாக, அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அதிகாரபூர்வமற்ற தேடுதலின் போது இந்த சட்டவிரோத தடுப்புக்காவலுக்கான காரணம்,  சுங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விசித்திரமான கண்டுபிடிப்பினால் ஆகும்.

அந்த விசித்திரமான கண்டுபிடிப்பு லேபிளில் உள்ள சொற்றொடரின்  ஒரு சொல் ஆகும்.

இருப்பினும் இந்த சொற்றொடரைக் கொண்ட லேபிள் சீனாவில் அச்சிடப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்படுவதாகும்.  இது 2015 இல் இருந்து இலங்கைக்கு அந்த சுங்கத்தினாலேயே கொண்டு வரப்பட்டது  மேலும், அதே லேபிளைக் கொண்ட இந்த இலவங்கப்பட்டை தயாரிப்பு இப்போது நான்கு ஆண்டுகளாக அதே வழக்கத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சுங்க பரிசோதனை 

ஏற்கனவே, அமெரிக்க டொலர் 23,000 பெறுமதிமிக்க பட்டை பைகள் 2000ற்கு சரக்கு ஏற்றுவதற்கான கூலியாக 477,292.50 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. சுங்கத்தினால் மேற்கொள்ளப்படும்  இந்த அசாதாரண நடத்தைக்கு முகங்கொடுத்து, ஏற்கனவே அமெரிக்காவுக்குச் சென்றிருந்த நிறுவனத்தின் உரிமையாளர்,அங்கிருந்து சுங்க பணிப்பாளர் ஜெனரலை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். இதன்போது நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு பொறுப்பான பணிப்பாளர் ரன்தெனியவை சந்திக்குமாறு தொலைபேசியில் தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனம் பல சந்தர்ப்பங்களில் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்ததில் தோல்வியுற்றதால்  பொலிஸில் புகார் அளித்துள்ளது. முதல் புகாரை நெலுவ பொலிஸார் புறக்கணிக்க, கட்டுநாயக்க பொலிஸார் புகாரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் புகாரை விசாரித்து, சுங்கச் சட்டத்தின் விதிகளில் தலையிட காவல்துறைக்கு அதிகாரம் இல்லாததால் புகார் நிறுத்தப்படும் என்று நிறுவனத்திற்கு தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது சுங்கம் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்கிறது. அவர்கள் பொலிஸாருக்கு  வேறு கதை சொல்கிறார்கள். அதாவது இது தொடர்பாக விசாரணை செய்ய வருமாறு பல சந்தர்ப்பங்களில் நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் நிறுவனம் விசாரணைக்கு வரவில்லை எனவும், இந்த குற்றசாட்டு முன்வைக்கப்படும் ஆகஸ்ட் 16ம் திகதி, சுங்கத்தினால் மிகவும் அபத்தமான முறையில், "இன்று சுங்கத்தில் நடத்தப்படும்  விசாரணைக்கு வருமாறு" நிறுவனத்திற்கு கூறப்படுகிறது.

இந்த இலவங்கப்பட்டை தயாரிக்கும் ஹினிடும ஹபரகட கிராமம் கொழும்பிலிருந்து 115 மைல் தொலைவில் அமைந்துள்ளது என்பது இலங்கை சுங்கத்திற்கு தெரியாதா? எனவே, அவர்களை சந்திக்க வேறொரு நாள்  கேட்டு சுங்கத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்ட போதும்  இன்றுவரை பதிலளிக்கப்படவில்லை.

இறுதியாக, நிறுவனத்தின் பிரதிநிதி கொழும்பில் உள்ள பிரதான சுங்க அலுவலகத்திற்குச் சென்று, மூத்த சுங்க அதிகாரிகலான ரன்தெனிய மற்றும் ஜகத் 2019 செப்டம்பர் 24 அன்று சந்தித்தார். சுங்க பரிசோதனையில் பங்கேற்ற பிரதிநிதி குறித்த சந்திப்பு  நட்புரீதியானதாக  இல்லை என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர் நிறுவனம் ஒரு அறிவிப்பைப் பெறுகிறது. அவர்கள் சுங்க வளாகத்திற்கு வந்து லேபிளின் ஒரு பகுதியை மறைக்க ஒப்புதல் அளிக்கும் கடிதத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அக்டோபர் 4, 2019 அன்று, ஒரு நிறுவன பணிப்பாளரினால் அந்த  கடிதம் வழங்கப்பட்ட பின்னர், இலவங்கப்பட்டை தூள் இருப்பு போக்குவரத்துக்காக வெளியிடப்பட்டது என்று கூறியது. இன்று வரை அந்த கடிதத்திற்கு எந்த பதிலும் இல்லை.

தொழிற்சாலை 5 மாதங்களுக்கு மூடப்பட்டது.

இறுதியில் 540 டொலருக்கும் அதிகாகமான ஒருநாள் வருமானத்தை கொண்ட இந்த நிறுவனம் 2019.08.07ம் திகதி மூடுவதற்கு " இலங்கை சங்கத்தின்  மற்றும் செயலாக்கங்களின் வணிகம் இன்று முதல் மூடப்பட்டிருப்பதால் இலங்கை அரசாங்கத்திற்கும், சம்பந்தப்பட்ட அரச திணைக்களத்திற்கும், எங்கள் ஊழியர்கள் மற்றும் இலவங்கப்பட்டை வழங்கிய உழவர் குடும்பங்கள் அனைவருக்கும் எமது அனுதாபத்தை அறிவிக்கின்றோம்" என  பிரபலமான பத்திரிகை ஒன்றில்  விளம்பரம் வெளியிடப்பட்டது.

இதனால் இந்தத் தொழிலில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது வருமானத்தை இழந்துள்ளனர்.

இலவங்கப்பட்டை பைகளின் லேபிளில் அப்படி என்ன இருந்தது?

நான்கு வருடங்களாக இலங்கை சுங்கத்திற்கு காணமுடிடியாத இலவங்கப்பட்டை லேபிளில் இருந்த சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் விளக்கம் பின்வருமாறு.

‘‘We donate USD 0.25 from each bag of cinnamon we sell to the Stateless Peoples Foundation run by Diyesta group.

In Sri Lanka, most of the labor workforce consists of Indian Tamils who came to Sri Lanka during the days of British rule. Most of them still lack of Sri Lankan citizenship, which prohibits them from enjoying free education, free medicine and other benefits that full citizens enjoy. For this reason, we have started a project to empower the children of our working communities by providing them with the best education we can. We believe that empowering of a child is like empowering a generation. Today you become a part of our small exercise to bring a bright future to the children of this beautiful island. We thank you for that!‘‘

சுங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய இந்திய தமிழர்கள் குறித்த பகுதியை லேபளில் மறைப்பதற்கு நிறுவனம் ஒப்புக்கொள்க்கிறது. பொலிஸ் விசாரணையின்படி, தாயகத்தை இழந்த தமிழ் மக்கள் குறித்து சுங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது. சுங்கச் சட்டத்தின்படி அவர்கள் செயல்பட்டதாக சுங்கம் கூறுகிறது. ஆனால் நாங்கள் கேட்பது என்னவென்றால், சுங்கச் சட்டத்தின் கீழ் ஐந்து மாத காலத்திற்கு, முறையான விசாரணையின்றி, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எந்தவொரு எழுத்துப்பூர்வ அறிவிப்பும் கொடுக்காமல், தன்னிச்சையாக பொருட்களை வைத்திருக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பதுதான்.