மசூதிகள் -சட்டவிரோத மத தண்டனைகளை தடை செய்யுங்கள்

மசூதிகள் -சட்டவிரோத மத தண்டனைகளை தடை செய்யுங்கள்

4 July 2019 11:38 am

பண்டாரகம,அடுலகம அப்துல் ஹசன் பாத்திமா ஹயிபா பொதுபலசேனா தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரருடன் இணைந்து ஊடகங்களுடன் பேசியதை  கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஞானசார தேரர் தனது முஸ்லிம் விரோத அரசியல் நோக்கங்களுக்காக பாத்திமாவை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம், ஆனால் இந்த விடயத்தை கைவிட்டு பாத்திமாவின் பிரச்சினை குறித்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இது முழு முஸ்லிம் சமூகத்திலும் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையின் வெளிப்பாடு மட்டுமே.

2008 ஆம் ஆண்டு, சிங்களவருடனான தனது திருமணத்தின் மூலம் தனது கணவர், குழந்தைகள் மற்றும் அவரது கிராம தேவாலயம் மற்றும் அயலவர்களினால் ஏற்பட்ட அடக்குமுறையை அவர் அம்பலப்படுத்தினார்.

அவருக்கு எதிராக பள்ளிவாசலின் மௌலவிமார்கள் தண்டனைகளை வழங்க முயற்சித்திருப்பதாக பாத்திமா கூறும் காரணிகளில் புரிந்துக்கொள்ள கூடியதாக உள்ளது.

பாத்திமா கூறும் வகையில், சில நேரங்களில் அவர் காவல்துறை முன்னிலையில்  தொந்தரவு செய்யப்பட்டுள்ளார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாக்க காவல்துறை தேவையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அவர் அளித்த ஆறு புகார்கள் விசாரிக்கப்படவில்லை என்று பாத்திமா கூறுகிறார்.

இது முதலாவது சந்தர்ப்பம் அல்ல. 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாள், குருணாகலை மாவட்ட முதுண்துவ கிராமத்தில், பள்ளிவாசலின் மௌலவிமார்களினால் இரவு ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு குறித்த  கிராமத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஆண்கள், இளம் பெண் ஒருவரை  அவரது கணவருக்கு முன்னால் கீழே தள்ளி தென்னம் மட்டையால் தாக்கியுள்ளனர்.

குறித்த பெண் மறுநாள் மாவதகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களின் புகார்கள் தொடர்பாக மாவதகம மற்றும் கொகறுல்ல  பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற இன்னும் பல சம்பவங்கள் பதிவாகியிருக்கலாம். இது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது.மசூதிகள் இவ்வாறு நாட்டின் சட்டத்திற்கு முரணாக குறிப்பாக பெண்களை கொடுமைப்படுத்துதலைத் தடுக்க வேலை செய்வது கட்டாயமாகும். 

இது தொடர்பாக காவல்துறைக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்த நாட்டின் நடைமுறை படி முஸ்லிம் அல்லாத வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மதம் மாறியதால் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை.

விசேடமாக சிங்கள சமுதாயத்தில் பெண்கள், குறிப்பாக, மத மாற்றங்கள் காரணமாக ஒடுக்குமுறைக்கு ஆளாக மாட்டார்கள். சில சிங்கள பௌத்த  பெண்கள் இஸ்லாமிற்கு மாறினாலும், பௌத்த சமுதாயத்தால் பெண்கள் துன்புறுத்தப்படுவதாக எந்த தகவலும் இல்லை.

நாடு முழுவதும் பரவி வரும் முஸ்லிம்  தீவிரவாதத்தையும் சிங்கள பௌத்த  மற்றும் இந்து தீவிரவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும்.

KK

මුස්ලිම් පල්ලිවලින් දෙන නීති විරෝධී ආගමික දඬුවම් තහනම් කරනු