வெளிநாட்டு குப்பைகளை இலங்கையில் கொட்ட அனுமதிக்க மாட்டோம்
Saturday, 25 Sep 2021

வெளிநாட்டு குப்பைகளை இலங்கையில் கொட்ட அனுமதிக்க மாட்டோம்

1 August 2019 10:05 am

சிலோன் மெட்டல் பிராசசிங் கார்ப்ரேஷன் (சிம்ப்கோ) பணிப்பாளர் சஷி கொறான் வெளிநாட்டு குப்பைகளை கொட்டிய குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

அண்மையில் ஊடகங்களிடம் பேசிய அவர், தனது வணிகத்துடன் தொடர்புடைய வளங்களை மீண்டும் உருவாக்கும் செயல்முறை குப்பை அகற்றும் தொழிலில் இருந்து மிகவும் வேறுபட்டது என குறிப்பிட்டுள்ளார்.

"வள மீளுருவாக்கம் இயக்கம் இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களில் ஒன்றாகும். நாங்கள் வளங்களை மறுசுழற்சி செய்கிறோம். இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவுகிறது. வளங்களின் பாவனை குறைக்கப்படும். இந்த பிரச்சினை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதால்  இலங்கையர்களுக்கு உலக வளங்களையும் இலங்கையின் பொருளாதார நலனையும் புரிந்து கொள்ள உதவியுள்ளது. 

நாட்டின் சட்டத்தின்படி, மறு செயலாக்கத்திற்கும் மறு ஏற்றுமதிக்கும் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.அவை நேரடியாக கொண்டு செல்லப்பட்டால் அவை நாட்டின் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள் அல்லது சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு அனுப்பப்படும்." என அவர் தெரிவித்துள்ளார்.

குப்பை கண்டேனர்கள் துறைமுகத்திற்கு வெளியே கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் கூறினார். இது சட்டவிரோதமானது என்றும், அதை வெளியே கொண்டுவருவதற்கான சக்தி இருப்பது சுங்க மற்றும் சுதந்திர வர்த்தக வலய இயக்குநர்கள் மட்டுமே என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

"அட்வாண்டிஸ் என்பது இலங்கையின் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் நெறிமுறை தரங்களில் ஒன்றான ஹேலிஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும். நாங்கள் அவர்களுடன் பணியாற்ற முக்கிய காரணம் இந்த நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் நற்பெயர், ”என்று அவர் கூறியுள்ளார்.

KK