டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி

டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி

18 July 2019 05:14 pm

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக அந்நாட்டு பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.

பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களே அதிகம் உள்ளனர்.

அல் கிரீன் என்ற உறுப்பினர் பிரதிநிதிகள் சபையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

முதலாவதாக வாக்களித்த சபாநாயகர் நான்சி பெலோசி தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த்துள்ளார்.

இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக 332 வாக்குகளும், ஆதரவாக 95 வாக்குகளும் பதிவானதால் பதவிநீக்கத் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல்கள் இருந்த போதும் ஜனநாயகக் கட்சியினரில் பலர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

கடந்த தீர்மானத்தின் போது 66 வாக்குகளையே தான் முன் மொழிந்த தீர்மானம் பெற்றாலும், தற்போது 95 பேர் ஆதரவளித்திருப்பதாக அல் கிரீன் குறிப்பிட்டுள்ளார்.

KK