டுடன்காமன் தலை 6 மில்லியனுக்கு ஏலம்
Wednesday, 08 Jul 2020

டுடன்காமன் தலை 6 மில்லியனுக்கு ஏலம்

5 July 2019 03:19 pm

சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படும் மன்னர் பார்வோன் டுடன்காமனின் தலையின் படம் லண்டனில் ஏலம் விடப்பட்டுள்ளது.

எகிப்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த ஏலம் நடந்ததாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டனில் கிறிஸ்ட்டிஸ்  நிறுவனத்தினால் ஏலம் நடத்தப்பட்டதுடன், 28.5 செ.மீ உயரமுள்ள பார்வோனின் தலை 5.97 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இருப்பினும், வாங்குபவர் யார் என்பது குறித்து கிறிஸ்டிஸ் இன்னும் வெளியிடவில்லை.

தனது ஒன்பது வயதில் பார்வோன்களின் ராஜாவாக்கப்பட்ட டுடன்காமன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு துரதிர்ஷ்டவசமாக இறந்தார்.

இது ஒரு திருட்டு என்று எகிப்திய அதிகாரிகள் வாதிடுகின்றனர். இது தொடர்பாக எகிப்திய அரசாங்கம் யூனிஸ்க்கோவிற்கு அறிவித்துள்ளது.

எகிப்தியர்கள் ஒரு குழு ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்தியுள்ளது. பண்டைய எகிப்தின் மிகவும் பிரபலமான மன்னர் துட்டன்காமூனின் பிரதி ஒரு அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டுமே தவிர ஒரு வீட்டில் இருக்கக்கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்திய அதிகாரிகள் ஏலத்தை நிறுத்தி, துட்டன்காமுன் மன்னரின் உருவத்தை எகிப்துக்கு திருப்பி அனுப்ப முயன்றனர், ஆனால் அது தோல்வியடைந்தது. இதற்கு காரணம் படம் திருடப்பட்டது என்பதை நிரூபிக்க அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதே.

KK