ரஷ்ய கப்பலில் தீ

ரஷ்ய கப்பலில் தீ

3 July 2019 01:46 pm

ரஷ்ய கடற்படையின் நீர் மூழ்கி  ஆய்வுக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பணியாளர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய கடற்படையின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை ரஷ்ய பிராந்திய நீர்ப்பரப்பில் குறித்த கப்பல் அளவீட்டு பணிகளில் ஈடுபட்டிருந்த போதே தீ விபத்தில் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த தீயினால் வெளிவந்த விஷப்புகையினால் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து தெளிவான தகவல்களை வழங்க ரஷ்ய அரசு மறுத்துவிட்டாலும், குறித்த கப்பல் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

KK