புகைபிடிக்க தடை

புகைபிடிக்க தடை

2 July 2019 03:46 pm

2020ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு புகைபிடித்தலுக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய நேற்று (01) பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. 

இந்த சட்டத்தின்படி பாடசாலைகள், வைத்தியசாலைகள், மத்திய மற்றும் மாகாண அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதனால் இந்த சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும். 

இந்த விதி முறைகளை தவறும் பட்சத்தில் அதன் நிர்வாகிகளுக்கு 5 லட்சம் யென் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் குறித்த தடையை மீறி புகைபிடிக்கும் நபர்கள் 3 லட்சம் யெனை அபராதமாக செலுத்தப்பட வேண்டும் என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

kk