பதவி விலகினார் தெரசா மே
Friday, 24 Jan 2020

பதவி விலகினார் தெரசா மே

24 May 2019 10:05 am

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவி விலகவுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதி கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதாக தெரசா மே தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு இங்கிலாந்தில் மக்களிடம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை செயல்படுத்துவதற்கு "தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.

இன்று (24) இங்கிலாந்து டவுணிங் ஸ்டீட் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான உணர்ச்சிகரமான அறிவிப்பிலே இதனை கூறியுள்ளார்.

பிரெக்ஸிட்டை அமலாக்க முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நாட்டின் சிறந்த நலன்களை பேணும் வகையில் புதிய பிரதமர் இருப்பார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் நாட்டின் நலனுக்கு புதிய பிரதமர் தேவை என்பதை புரிந்துக் கொள்கிறேன். நான் நேசிக்கும் நாட்டின் பிரதமராக பதவி வகித்தது எனக்கு கிடைத்த கௌரவம். பதவி விலகுவது சோகமானதுதான் ஆனால் தவிர்க்க முடியாதது.' என குறிப்பிட்டுள்ளார்.