முன்பின் முரண் தள்ளி முந்தியடித்த மோடி
Wednesday, 11 Dec 2019

முன்பின் முரண் தள்ளி முந்தியடித்த மோடி

23 May 2019 10:50 am

இந்திய பொது தேர்தலில் இம்முறையும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகா கட்சி முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

343 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 91 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 105 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்த நிலையில் மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆகின்றார்.

இந்த நிலையில் மோடிக்கு உலக தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 91 தொகுதிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளார்.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

modi

இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி முகத்தில் இருப்பது தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ,

அனைவரும் இணைந்து + அனைவரின் வளர்ச்சி + ஒவ்வொருவரின் நலன் = இந்தியாவின் வெற்றி. அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சி அடைவோம். அனைவரும் ஒன்றிணைந்து வளம் பெறுவோம். அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவோம். இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

modi 1

KK