கணவன் கண்முன்னே கற்பழிக்கப்பட்ட பெண்
Tuesday, 10 Dec 2019

கணவன் கண்முன்னே கற்பழிக்கப்பட்ட பெண்

8 May 2019 08:59 am

பாலியல் தொல்லைகள் உலகமெங்கும் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒவ்வொரு நாளும் பாலியல் தொல்லைகள், கற்பழிப்புக்கள் தொடர்பாக செய்திகள் வெளியாகியவண்ணமே உள்ளது.

அந்த வகையில் கணவர் முன்னே கற்பழிக்கப்பட்ட பெண் தொடர்பாக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தனகாஜி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கற்பழிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, அவர்களை திடீரென்று 5 வாலிபர்கள் வழிமறித்துள்ளனர். கணவர்-மனைவி இருவரையும் காட்டு பகுதிக்கு தூக்கி சென்று கணவரை தாக்கி மரத்தில் கட்டிப்போட்டுள்ளனர்.

பின்னர் அப்பெண்ணை 5 பேரும் மாறி மாறி கற்பழித்துள்ளனர்.அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இதுபற்றி பொலிஸில் புகார் செய்தால் வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இதனால் பயந்துபோன பெண் மற்றும் அவரது கணவர் பொலிஸில் புகார் செய்யவில்லை. இந்த நிலையில் 5 வாலிபர்களும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் கணவன் மனைவி இருவரும் சம்பவம் நடந்த 6 நாட்களுக்கு பிறகு பொலிஸில் புகார் செய்தனர். ஆனால் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் 5 வாலிபர்கள் எடுத்த வீடியோ பரவியது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காத பொலிஸாரை கண்டித்தும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் லொறி டிரைவர் இந்தர்ராஜ் குர்ஜார் என்பவரை கைது செய்துள்ளனர். மற்ற 4 பேரும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த 4 பேரையும் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.