சீனாவில் தொற்றுநோயால் 1859பேர் பலி
Wednesday, 11 Dec 2019

சீனாவில் தொற்றுநோயால் 1859பேர் பலி

3 May 2019 10:12 am

சீனாவில் தொற்றுநோயால் ஒரு மாதத்தில் 1859பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் பல பகுதிகளில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்க தனி மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் வாந்திபேதி மற்றும் எலிக் காய்ச்சல் மிக மோசமான தொற்று நோய்களாக கருதி தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவைதவிர, ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்கத்தினால் உண்டாகும் காய்ச்சல், காசநோய், சிபிலிஸ், கொகோர்ரியா, எய்ட்ஸ், கால் மற்றும் வாய்ப்புண் ஆகிய தொற்று நோய்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 8 லட்சத்து 79 ஆயிரத்து 800 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களில் சிகிச்சை பலனின்றி 1859 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப கட்டுபாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.