விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் லண்டனில் கைது!

விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் லண்டனில் கைது!

11 April 2019 10:31 am

விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜூலியன் அசாங்கே இன்று பிரித்தானிய பொலிஸாரால் லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோரியன் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தாக்குதல் வழக்கு தொடர்பாக சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்குவடோரியன் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

அசாங்கே-யின் அரசியல் தஞ்சத்துக்கான கோரிக்கை ஈக்குவடோர் அரசால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தூதராகத்தால் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து அசாங்கே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் சரணடைய தவறியதற்காகவே அசாங்கே கைது செய்யப்பட்டதாக மெட்ரோபாலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் சர்வதேச மரபுகளை மீறிய காரணத்துக்காக அசாங்கே-யின் அரசியல் தஞ்சத்துக்கான கோரிக்கை மறுக்கப்பட்டதாக ஈக்குவடோர் ஜனாதிபதி லெனின் மொரேனோ தெரிவித்துள்ளார்.

அசாங்கே-யின் அரசியல் தஞ்சம் அகற்றப்படுவதில் ஈக்குவடோர் சட்டவிரோதமாக செயல்பட்டதாக விக்கிலீக்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.