9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்
Wednesday, 11 Dec 2019

9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்

18 March 2019 12:30 pm

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்த தெல்மா சயாகாவுக்கு டெக்சாசில் உள்ள பெண்கள் வைத்தியசாலையில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

6 குழந்தைகளில் அவற்றில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகள் தலா 480 கிராம் முதல் 950 கிராம் வரை எடையுடன் உள்ளன.

இந்த குழந்தைகள் காலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் அதாவது 9 நிமிட இடைவெளியில் பிறந்துள்ளன.

குழந்தைகளும், தாயும் நல்ல நிலையில் உள்ளனர். குழந்தைகள் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

470 கோடியில் ஒரு பெண்ணுக்கு தான் இதுபோன்று குழந்தை பிறக்கும். அந்த சாதனையை தெல்மா முறியடித்து விட்டார்.

இவர் தனது பெண் குழந்தைகளுக்கு ஷினா, ஷீரியல் என பெயரிட்டுள்ளார். 4 ஆண் குழந்தைகளுக்கு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்.