இந்தோனேசியாவில் அதிக மழை- 42 பேர் பலி

இந்தோனேசியாவில் அதிக மழை- 42 பேர் பலி

17 March 2019 11:30 am

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று கனமழை பெய்துள்ளது.

இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன்,21 பேர் காயமடைந்துள்ளனர்.

தற்போது மழை குறைவடைந்துள்ள நிலையில் மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.