விசாரணைகளுக்கு இடையூறு செய்வதாக ரதன தேரருக்கு எதிராக முறைப்பாடு

விசாரணைகளுக்கு இடையூறு செய்வதாக ரதன தேரருக்கு எதிராக முறைப்பாடு

28 June 2019 03:47 pm

குருணாகல் வைத்தியசாலையில் சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக டொக்டார் சஹாப்டீன் சாபிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரதன தேரர் ஊடகங்களின் எதிரில் கண்காட்சியை நடத்தி, விசாரைண செய்யும் அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகளிலும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதுடன் அவர்களை அச்சுறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரியில் விஞ்ஞான அடிப்படையில் குருணால் பிரச்சினையை அணுகக் கூடாது எனவும், இதனை சமூக விஞ்ஞான அடிப்படையில் அணுக வேண்டுமெனவும் ரதன தேரர் கோரி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணைகளின் பின்னர் உயர் பொலிஸ் அதிகாரியான திசேராவை ஊடகங்களின் முன்னிலையில் கடும் தொனியில் ரதன தேரர் எச்சரித்திருந்தார்.

எதிர்வரும் தேர்தலலில் போட்டியிட அல்லது தேசியப் பட்டியலில் இணைந்து கொள்ளவே இவ்வாறு ரதன தேரர் ஊடகங்களின் முன்னிலையில் கண்காட்சி காட்டி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

ரதன தேரரின் செயற்பாடுகள் குறித்து நீதிமன்றிற்கு அறிவிப்பதற்கு புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.