பல் மருத்துவர் மகப்பேற்று மருத்துவர்களுக்கு ஆலோசனை
Wednesday, 11 Dec 2019

பல் மருத்துவர் மகப்பேற்று மருத்துவர்களுக்கு ஆலோசனை

28 June 2019 03:35 pm

குருணால் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் டொக்டர் சஹாப்டீன் சாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

குருணாகல் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடத்தப்பட்ட போது பாதிக்கப்பட்டோரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஒருவர், புலனாய்வுப் பிரிவினருக்கு விஞ்ஞானபூர்வமான தகவல்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விஞ்ஞானபூர்வமான தகவல்களை வழங்கக்கூடிய நபர் நீதிமன்ற வளாகத்தில் இருப்பதாகவும் அவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சரத் வீர பண்டா எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தாங்கள் விஞ்ஞானபூர்வமான தகவல்களை பெற்று;ககொண்டதாகவும் மகப்பேற்றியல் நிபுணர்களிடம் தகவல் பெற்றுக் கொண்டதாகவும், வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒர் பல் மருத்துவர் எனவும் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் சட்டத்தரணி அந்த விடயம் பற்றி எதனையும் பேசாது மௌனமாகிவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.