ஆபாச வீடியோ ஜோடியில் ஆணுக்கு கொரோனா உறுதி! பிணையில் விடுதலை
Saturday, 27 Nov 2021

ஆபாச வீடியோ ஜோடியில் ஆணுக்கு கொரோனா உறுதி! பிணையில் விடுதலை

3 September 2021 04:26 pm

பலாங்கொட - பெலிகுல்ஓயா பகுதியில் ஆபாச வீடியோவில் சிக்கிய இளைஞனும் யுவதியும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் யுவதியும் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அதனால் இருவரையும் நீதிமன்றில் ஆஜர் செய்யாது பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 16ம் திகதி இவர்கள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த ஆண் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் யுவதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

பெலிகுல்ஒயா மற்றும் மீமுரே பகுதியில் ஆபாச வீடியோ எடுத்து அதனை வௌிநாட்டு இணையங்களில் பதிவேற்றி பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் இவர்கள் இருவரும் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.