ரணில் கலந்துகொண்ட இரவு விருந்தில் நடந்தது என்ன? முழுவிபரம் இணைப்பு!
Saturday, 25 Sep 2021

ரணில் கலந்துகொண்ட இரவு விருந்தில் நடந்தது என்ன? முழுவிபரம் இணைப்பு!

14 July 2021 06:10 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பத்தரமுல்ல புதிய வீட்டில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக நாம் செய்தி வெளியிட்ட இரவு விருந்து இனிதே நிறைவு பெற்றுள்ளது. நாம் கூறியது போல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த இரவு விருந்தில் பங்கேற்றுள்ளார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் 43 ஆவது படையணியின் தலைவருமான சம்பிக்க ரணவக்க இந்த இரவு விருந்தில் கலந்துகொள்ள இருந்தபோதும் இறுதி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, விளம்பர நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப அமிர்தநாயகம் ஆகியோர் இந்த இரவு விருந்தில் பங்கேற்று உள்ளனர்.

பிரதீப் அமிர்தநாயகம் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது அவரது பணியாற்தொகுதி பிரதி பணிப்பாளராக செயல்பட்டார். எனினும் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு நெருங்கிய நபர் ஆவார்.

அதனால் நேற்று இரவு 12 மணி வரை நீடித்த இரவு விருந்தில் எவ்வித அரசியல் விடயங்களும் பேசப்படவில்லை. அரசியல் விடயங்கள் ஏதேனும் பேசப்பட்டால் அது அமிர்தநாயகத்தின் ஊடாக அடுத்த நிமிடமே சஜித் பிரேமதாசவை சென்றடையும் என்ற சந்தேகம் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்பட்டதால் அரசியல் தவிர்த்து சாதாரண விருந்தாக நிறைவு பெற்றுள்ளது.

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகும் கனவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடன் தொடர்பினை ஏற்படுத்தி எப்படியாவது அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பிளவுபட்டு சம்பிக்க ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தால் அது ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய பின்னடைவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.