விருந்து சாப்பிட மட்டுமே சென்றனர்! அரசியல் எதுவும் பேசவில்லை! - ஐதேக விளக்கம்
Saturday, 25 Sep 2021

விருந்து சாப்பிட மட்டுமே சென்றனர்! அரசியல் எதுவும் பேசவில்லை! - ஐதேக விளக்கம்

10 July 2021 12:49 pm

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இரவு விருந்து உபசாரம் ஒன்றில் கலந்து கொண்டு அரசியல் எதுவும் பேசவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தௌிவுபடுத்தியுள்ளது. 

கொள்ளுபிட்டி 5ம் ஒழுங்கில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நபர் ஒருவரின் மகனது பிறந்த நாள் விருந்தில் கடந்த வியாழக்கிழமை ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டதுடன் அதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்ப உறவுகளும் கலந்து கொண்டனர். 

இங்கு அரசியல் நிலைமை குறித்தோ அல்லது புதிய அமைச்சரவை மாற்றம் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை எனவும் ஊடகங்கள் சிலவற்றில் வௌியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.