ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்கட்சிக்கு தாவத் தயார்!
Friday, 24 Sep 2021

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்கட்சிக்கு தாவத் தயார்!

22 June 2021 11:47 pm

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்கட்சி வரிசை ஆசனத்தில் அமர்வதற்கு தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எதிர்கட்சி வரிசையில் அமரும் இவர்கள் சுயாதீனமாக செயற்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த கட்சி மாறும் செயற்திட்டத்தின் பின்னணியில் கொழும்பில் உள்ள பிரபல விகாரை ஒன்றின் தேரர் இருப்பதாக அறிய முடிகிறது. 

எனினும் எப்போது இந்த கட்சி தாவும் சம்பவம் இடம்பெறும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

ஆளும் கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிகட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.