சம்பிக்கவிற்கு பிரதமர் பதவி! கோரிக்கையை நிராகரித்த சஜித் தரப்பு! முரண்பாடு தொடர்கிறது..
Saturday, 25 Sep 2021

சம்பிக்கவிற்கு பிரதமர் பதவி! கோரிக்கையை நிராகரித்த சஜித் தரப்பு! முரண்பாடு தொடர்கிறது..

15 June 2021 09:52 am

 

ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை சீர்செய்யவென சஜித் பிரேமதாஸ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் சார்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று கடந்த 11ம் திகதி இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பின் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் சம்பிக்க ரணவக்கவிற்கு பிரதமர் வேட்பாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என சம்பிக்க சார்பில் யோசனை முன்வைக்கப்பட்டது. 

எனினும் சஜித் தரப்பினர் அதனை நிராகரித்ததுடன் சம்பிக்க ரணவக்கவைவிட பாராளுமன்றில் 32 வருடங்கள் அனுபவம் கொண்ட மக்கள் செல்வாக்குடைய ராஜித சேனாரத்ன, லக்ஷமன் கிரியெல்ல போன்றவர்களும் சிரேஸ்ட தலைவர்களான ரஞ்சித் மத்துமபண்டார, கயந்த கருணாதிலக, சரத் பொன்சேகா, திஸ்ஸ அத்தநாயக்க போன்றவர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசவில்லை என சம்பிக்க கூறுகின்ற போதும் மூன்று வாரத்திற்கு முன்னர் சம்பிக்க ரணவக்க கிரீன்பார்க்கில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து 3 மணித்தியாலங்கள் பேசியதற்கு ஆதாரம் இருப்பதாக சஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.