ஐதேக தலைவர் பதவிக்கு ஐவர் இடையே போட்டி. ஆறாவது நபர் மௌனம்
Saturday, 15 Aug 2020

ஐதேக தலைவர் பதவிக்கு ஐவர் இடையே போட்டி. ஆறாவது நபர் மௌனம்

28 June 2020 08:17 am

ரணில் விக்ரமசிங்கவின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை ஏற்பது தொடர்பை அவருடைய பகிரங்க போட்டி நிலவி வருகிறது.

ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, அகில விராஜ் காரியவசம், சாகல ரத்நாயக்க மற்றும் தயா தர்மபால கமகே ஆகியோர் இடையே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டி நிலவி வருவதுடன் அதன் முதல் கட்டமாக வெற்றிடமாக உள்ள சஜித் பிரேமதாசவின் பிரதித்தலைவர் பதவியை பெற இந்த ஐவரும் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.

இதேவேளை விஜயவர்தன - விக்ரமசிங்க பரம்பரைக்கு உரிமை கோரும் ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை ஏற்க அதிக வாய்ப்புள்ள ருவான் விஜயவர்தன அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறார்.

இறுதியாக 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட யோசனைக்கு அமைய 2023 ஆம் ஆண்டு வரை கட்சியின் தலைவர் பதவியை வகிக்க ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.