ரவி கருணாநாயகவை பிடிக்க பிரதமரிடம் அனுமதி கேட்ட CID !
Monday, 10 Aug 2020

ரவி கருணாநாயகவை பிடிக்க பிரதமரிடம் அனுமதி கேட்ட CID !

16 March 2020 12:32 pm

2016ம் நடைபெற்ற பினைமுறி மோசடி தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேரை கைது செய்வதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்தது கடந்த பெப்ரவரி 06ம் திகதியாகும். மறுநாள் காலை பொலிஸார் அவரது வீட்டிற்க்கு சென்ற போதிலும் அங்கு அவரை இருக்காததால் அவர்களுக்கு வெறும் கையேடு திரும்ப நேரிட்டது.

இதற்கமைய  குற்றவியல் புலனாய்வு திணைக்கத்தின்  (சிஐடி) குற்றப் புலனாய்வு பிரிவு ( criminal investigation unit) ரவி கருணநாயக்க மீது உளவு பார்க்கத் தொடங்கியிருந்தது. கணிசமான முயற்சிக்குப் பிறகு,  ரவி கருணநாயக்க தங்கியிருந்த ஒரு வீட்டைப் பற்றிய தகவல்களை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு,  ரவி கருணநாயக்க நிச்சயமாக வீட்டில் இருப்பதை சிஐடி உறுதிப்படுத்தியது. உடனடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் டபிள்யூ திலகரத்னவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பெறுமதியான தகவல் கிடைத்ததும் திலகரத்ன உடனடியாக பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை சந்திக்க சென்றார். இவர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என காவல் துறையின்  அனைவருக்கும் தெரியும்.

திலகரத்னவிடம் ரவி குறித்து தகவல் பெற்ற உடனேயே " சரி சரி கைது செய்வதற்கு முதல் பிரதமரை சந்தியுங்கள் " என பதில் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார். திலகரத்ன உடனடியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கச் சென்று  ரவி கருணநாயக மறைந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். பிரதமர் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை, "ஆ, அப்படியா?" என மட்டுமே கேட்டுள்ளார்.

அப்போது திலகரத்ன பிரதமரிடம், “தற்போது சேர் நாங்கள் என்ன செய்வது?" என கேட்டுள்ளார். இதன்போது பிரதமர் நேரடியாக " என்னிடம் என்ன கேட்கிறீர்கள் ? இருக்கும் இடம் தெரிந்தால் போய் பிடியுங்கள். என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்க தேவையில்லை" என அவரிடம் கூறியுள்ளார்.

இதற்கமைய பொலிஸ் தலைமையகத்திற்குத் திரும்பி சென்று தேவையான அதிகாரிகளை வரவழைத்து, பணி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டபோது சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்துவிட்டது, அதன் பின் ரவி கருணாநாயகவை கைது செய்வதற்காக குறித்த வீட்டை நோக்கி சென்ற நபர்களுக்கு அந்த நேரமே ரவி வீட்டை விட்டு சென்றுவிட்டார் என்று தெரியவந்தது  .

குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்றுவரை இருப்பது இத்தகைய நிலையிலே என்பதுடன், ஒரு துப்பு  கிடைத்தவுடன் உடனடியாக செயல்படாது ஒவ்வொருவரினதும் காலடிகளை வணங்கி வரும் பிரதானியுடன் நாட்டின் குற்றங்களை  எவ்வாறு எதிர்ப்பது என்ற கேள்வி சமூகத்தில் மிகவும் தீவிரமாக எழுந்துள்ளது.