கோட்டா-ஜோன் நெருக்கடி எல்லை மீற வாய்ப்பு!
Thursday, 23 Jan 2020

கோட்டா-ஜோன் நெருக்கடி எல்லை மீற வாய்ப்பு!

20 August 2019 12:19 pm

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பர்னாந்துக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாகவும், இந்நிலை எல்லை மீறக்கூடிய வாயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை 27ம் திகதி குருணாகலில் இடம்பெற்ற " வியத் மக " மாநாட்டை தாக்கி நாசப்படுத்த ஜோன்ஸ்டன் பர்னாந்து நடவடிக்கை எடுத்திருந்தார். கோதபய ராஜபக்ஷ தனது பிரச்சாரத்திற்காக ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் முக்கிய பேச்சாளராக இருந்தது மேஜர் ஜெனரல்  போனிபாஸ் பெர்னாண்டோ (Boniface Fernando).

தனது மாநாடு  மீதான தாக்குதல் தொடர்பாக கோதபய ராஜபக்ஷவுக்கு அவர் புகார் அளித்ததுடன், கோதபய ராஜபக்ஷவின் பிரதிநிதிகள் குழு ஜோன்ஸ்டன் பர்னாந்துவை வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தது.

இதன்போது ஜோன்ஸ்டன் தனது விருப்பத்திற்கு இதை செய்யவில்லை, இதை செய்ய மேலிடத்தில் இருந்து உத்தரவு கிடைத்தது, அதற்கு மேல் எந்த விளக்கமும் வழங்க இயலாது என கூறியுள்ளார். 

இருப்பினும் கோட்டாவின் குழு கடுமையாக வலியுறுத்தி " அப்படி சொல்லி சரிவராது, இது சம்பந்தமான முழுமையான விளக்கம் எங்களுக்கு வேண்டும். அதுமட்டுமல்ல கோட்டா சேர் முன்னால நீங்க எல்லாரும் உண்மைய சொல்லி வெளிபடையாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லைனா தெரியும்." என கூறியுள்ளனர்.

மஹிந்த படுகொலை சதி

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரை கொலை செய்வதற்கு LTTE அமைப்பு உடன் சதி செய்ததாக ஜோன்ஸ்டன் பர்னாந்து மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், அதற்குரிய ஆதாரங்களும் கிடைத்தன. தனது சகோதரரை கொலை செய்வதற்கு முயற்சித்த ஜோன்ஸ்டன் மீது கோட்டா அன்று முதல் பெரும் கோபத்தில் இருந்தார். இத்தகைய விடயத்திற்கு கோட்டா மன்னிப்பு வழங்க கூடியவர் அல்ல.

ஜோன்ஸ்டன் பர்னாந்துவை கைது செய்ய அப்போதைய சிஐடி தயாராகி கொண்டிருந்தபோது, கோட்டாவின் அதிகபட்ச சக்தி  அதற்காக இருந்தபோதிலும், அதை தவிர்த்து ஜோன்ஸ்டனை  தனது கட்சியில் சேர்த்து சம்பவத்தை மறைத்தது மஹிந்த ராஜபக்ஷ.

இப்போது கோட்டபய ராஜபக்ஷ தீர்க்கமான அரசியல் பிரமுகராக முன்வந்துள்ளதால், பழைய ஒப்பந்தங்களை ஒவ்வொன்றாக தீர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

க.கி