மலர்மொட்டுக்குள் பிளவு ?

மலர்மொட்டுக்குள் பிளவு ?

9 July 2019 10:27 am

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை வெடித்துள்ளது.
சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ரஸ்யாவில் நடைபெறும் இந்த நிகழ்வில் தமக்கு பதிலாக காஞ்சன விஜேசேகரவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டடுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
.
நாமல் ராஜபக்சவை பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு காஞ்சனவிற்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது பிரச்சினை கிடையாது என்ற போதிலும் இரண்டு தடவைகள் அழைத்து சந்தர்ப்பம் வழங்காமை வருத்தமளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் செல்லும் பயணங்களின் போது காவலாளி ஒருவரை அனுப்பி வைப்பதாகவும் அந்த வகையிலேயே காஞ்சன விஜேசேகர இவ்வாறு அழைத்துநச் செல்லப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.