இயற்கை சமநிலையை அழிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்

இயற்கை சமநிலையை அழிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்

5 March 2018 06:25 pm

மனிதகுல எதிரி நெகிழி!!
இயற்கை சமநிலையை அழிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்

பிளாஸ்டிக் பிரச்சினை!
உலகில் சமாளிக்க முடியாத பெரும் பிரச்சினையாக தலைதூக்கியுள்ளது. மேற்கத்தேய நாடுகளில் பிளாஸ்டிக் பிரச்சினையை சமாளிக்க சிறந்த கழிவு மேலாண்மையைக் கையாண்டு வருகின்றனர்.

ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இது மிகப்பெரிய பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது.

''நமக்கென்ன'' என்று தவிர்த்துவிடவோ, அலட்சியம் செய்துவிடவோ முடியாத மாபெரும் பிரச்சினை இது.

இதற்கு என்ன செய்யலாம் என்ற கேள்விகள் உங்களில் இருக்கலாம்.

இன்றே நாம் ஒன்றைச் செய்ய வேண்டியிருக்கிறது. நாளாந்தம் நாம் பாவனையில் இருந்து தவிர்க்கக் கூடிய பிளாஸ்டிக் பாவனையை முதலில் தவிர்ப்போம். இதற்கான விழிப்புணர்வு என்னிலும், உங்களிலும் இருந்துதான் தொடங்க வேண்டும்.

இதற்கு மாற்றீடாக புதிய திட்டம் ஒன்று வருகிறது. ஜேர்மனியில் உள்ள சமூக ஆர்வலர் Annesley Ratnasingham அவர்கள் இதற்கான திட்டமொன்றை இலங்கைக்குக் கொண்டுவருகிறார்.

ஜேர்மனியில் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்கு 37 கிலோ பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதாக அவர் கூறுகிறார். ஆனால் இலங்கையில்???

இந்த புதிய திட்டம் குறித்து இன்னும் விரிவாக பேசுவோம்.
நெகிழியைத் தவிர்ப்போம்! இயற்கை சமநிலையைப் பேணுவோம்!!