ஷகிலா படம்-சர்வதேச திரைப்பட விழாவில்

ஷகிலா படம்-சர்வதேச திரைப்பட விழாவில்

1 July 2019 06:49 pm

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை  இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார்.

திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‌

இந்த திரைப்படத்தில் ஷகிலாவின்  வேடத்தில் நடிகை ரிச்சா நடித்துள்ளார்.

சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்த அப்படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.