திரைக்கு வரும் முக்கிய படங்கள்

திரைக்கு வரும் முக்கிய படங்கள்

4 June 2019 11:48 am

இந்த மாதம் முக்கிய நடிகர்கள் சிலரின் திரைப்படங்கள் திரைக்குவரவுள்ளன.

இதற்கமைய விஜய் ஆண்டனி, அர்ஜுன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இந்த மாதம் 10 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 7ம் திகதி "கொலைகாரன்" திரைப்படம் வெளியாகிறது.

இதில் விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது. வருகிற 14ம் திகதி கொலையுதிர் காலம், கேம் ஓவர், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன.

கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் உள்ளனர். ஐராவுக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் இன்னொரு திகில் படமாக வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 21ம் திகதி விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத், தனுசின் பக்கிரி, ஜீவாவின் கொரில்லா மற்றும் தும்பா ஆகிய 4 படங்கள் திரைக்கு வருகின்றன.

28ம் திகதி ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி, யோகிபாபுவின் நகைச்சுவை படமான தர்மபிரபு ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

KK