OPPO-Reno தெரிவுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை
Friday, 13 Dec 2019

OPPO-Reno தெரிவுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

3 June 2019 06:34 am

OPPO வர்த்தக நாம அடையாளத்தை மீளமைத்துள்ளது.இலங்கையில் தனது உயர் நிலையை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் Reno தெரிவுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட செயற்பாடுகளுக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், முன்னணி சர்வதேச வர்த்தக நாமமான OPPO தரம், வடிவமைப்பு மற்றும் பிரத்தியேகத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய வர்த்தக நாம அடையாளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில் புத்தாக்கத்தை அறிமுகம் செய்வதில் முன்னோடியாக திகழும் OPPO, உயர் தர பிரிவில் சர்வதேச ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நாமமாக திகழ்கின்றது. 2019 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருந்த Counterpoint Research அறிக்கையின் பிரகாரம் ஒப்பற்ற 863% வளர்ச்சியை இந்தப்பிரிவில் பதிவு செய்துள்ளது.

அவ்வாறான உயர் வளர்ச்சியினால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதுடன், உயர் தர தெரிவுகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு போன்றவற்றின் அடிப்படையில், OPPO தனது புதிய வர்த்தக நாம அடையாளத்தை உருவாக்குவதற்காக நியுயோர்க்கின், புகழ்பெற்ற வடிவமைப்பாளரான Eddie Opara of Pentagram உடன் கைகோர்த்திருந்தது.

OPPO இன் புதிய வர்த்தக நாம அடையாளத்தினூடாக, நிறுவனத்தின் வளர்ச்சியில் முன்னேற்றம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான செயற்பாடு போன்றனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. புதிய வர்த்தக நாம அடையாளம், மிகவும் எளிமையான வர்த்தக நாமச் சின்னத்தைக் கொண்டுள்ளது. பிரத்தியேகமான OPPO curves உடன், புதிய வர்த்தக நாமச் சின்னம், கண்கவர் வகையில் அமைந்துள்ளதுடன், சிந்தனையை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய வர்ணத் தெரிவுகள் மற்றும் காட்சி வடிவமைப்புகளும் இந்த புதிய அடையாளத்தில் அடங்கியுள்ளதுடன், மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க typeface, OPPO Sans இன் அறிமுகமாகவும் அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் தொடர்ந்து தனது சந்தையை விஸ்தரித்து வரும் நிலையில், இந்த புதிய வர்த்தக நாம அடையாளத்தினூடாக OPPO இன் வளர்ச்சி மற்றும் பரந்தளவு சென்றடைவு போன்றன குறிக்கப்படுகின்றன.

புத்தாக்கம் மற்றும் ஆக்கத்திறன் போன்றவற்றில் தனது பயணத்தை தொடரும் OPPO தனது புதிய தயாரிப்பு தெரிவான Reno தொடரை அறிமுகம் செய்கின்றது. ஆக்கத்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Reno தெரிவுகள், ஆக்கபூர்வமான இளம் பாவனையாளர்களை இலக்காகக் கொண்டமைந்துள்ளது. இலங்கையில் அடுத்த பத்தாண்டு காலப்பகுதிக்கு OPPO இன் ஸ்மார்ட்ஃபோன் வடிவமைப்புக்கு திறவுகோலாக Reno செயற்படும். இந்த நோக்கத்திற்கமைய, OPPO தனது '“I’m Reno” ' வர்த்தக நாம பிரச்சாரத்திட்டத்தை உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கின்றது. இதில் புதிய தயாரிப்பு கொள்கை, வடிவமைப்பு கொள்கை மற்றும் தொடர்பாடல் மாதிரி போன்றவற்றுக்கு ஊக்குவிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும். '“I’m Reno” ' வர்த்தக நாம பிரச்சாரத்திட்டத்தின் அங்கமாக, சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற கலைஞர்களுடன் OPPO கைகோர்த்து, ஆக்கத்திறனை வெளிப்படுத்த முன்வந்துள்ளது.

சர்வதேச சமூகத்துக்காக OPPO இனால் வடிவமைக்கப்பட்டுள்ள தயாரிப்பு தெரிவான Reno, OPPO இயங்கும் சகல சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும். சீனா மற்றும் ஐரோப்பாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து கிடைத்திருந்த பெருமளவு வரவேற்பைத் தொடர்ந்து Reno, OPPO இலங்கையிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.