மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்துவதா? பொதித்தெழும் மொட்டு ஆதரவு தேரர்!
Monday, 19 Apr 2021

மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்துவதா? பொதித்தெழும் மொட்டு ஆதரவு தேரர்!

8 March 2021 09:36 am

ஞாயிறு குண்டுத் தாக்குதல் பொறுப்பு மீறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற கருத்தை நிராகரிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவான மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். 

மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசாங்கத்திற்குள் பிரச்சினை இருந்தது. அவரை சுந்திரமாக இயங்க விடவில்லை. அப்படி இருக்கையில் அவர் மீது குற்றம் சுமத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்ளக பிரச்சினை காரணமாகவே 52 நாட்களுக்கு மஹிந்த பிரதமராக செயற்பட்டதாக அபயதிஸ்ஸ தேரர் கூறினார். 

இந்த அரசாங்கத்திற்கு பொறுப்பு செயற்படுத்தல் மாத்திரமே இருப்பதாகவும் குற்றங்களை ஏற்று பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை எனவும் தேரர் தெரிவித்தார். 

BR