தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்கிறார் ரணில் விக்ரமசிங்க
Saturday, 06 Mar 2021

தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்கிறார் ரணில் விக்ரமசிங்க

20 January 2021 09:18 am

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை ஏற்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆறு மாதங்களுக்கு மேல் வெற்றிடமாகக் காணப்படும் இந்த தேசிய பட்டியல் உறுப்பினர் பொறுப்பை ஏற்குமாறு கட்சியின் முன்னிலை உறுப்பினர்களான அக்கில விராஜ், ரங்கே பண்டார போன்றவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். 

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என கட்சியின் உயர் சபையும் அறிவித்துள்ளது. 

விடுக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பொறுப்பேற்க ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக தெரியவருகிறது. 

இவ்விடயத்தை வர்த்தகர் திலித் ஜயவீர ஊடாக ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் உயர்பீடத்திற்கு தெரியப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

BR