தனது திருட்டு வேலைகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபரின் பெயரை விற்கும் ’திருட்டு ரொபின்ஸன் குமார்’!
Tuesday, 11 Aug 2020

தனது திருட்டு வேலைகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபரின் பெயரை விற்கும் ’திருட்டு ரொபின்ஸன் குமார்’!

9 July 2020 08:38 am

திருடன் ரொபின்ஸன் குமார்

கொள்ளையடித்த பணத்தை வைத்துக் கொண்டு இன்று கோடீஸ்வரனாக வளம் வரும் ரொபின்ஸன் குமார் பதில் பொலிஸ் மா அதிபர் சிடி.விக்ரமசிங்கவின் பெயரை விற்று தனது திருட்டு வேலைகளை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. 

கோயில்களில் பொருளாளர் சபையில் உறுப்பினராக இருந்து கொண்டு கோயில் பணத்தை கொள்ளையடித்து அதனை வட்டிக்கு வழங்கி வட்டியுடன் பணத்தை திருப்பிக் கொடுக்க தவறும் வர்த்தகர்களை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளான சில்வா, நந்தன ஆகியோரை வைத்து மிரட்டி அச்சுறுத்தி அதிகமாக பணம் வசூலித்தல் மற்றும் அவர்களது சொத்துக்களை அபகரித்தல் போன்றவை ரொபின்சன் குமாரின் திருட்டு வேலைகளாகும்.

இந்த ரொபின்ஸன் குமாரின் திருட்டு கேடுகெட்ட செயல்களால் பல குடும்பங்கள் நடு வீதிக்கு வந்துள்ளன. வட்டிக்கு பணம் கொடுத்து அதனை திருப்பிச் செலுத்தாத வர்த்தகர்களின் குடும்பப் பெண்களின் மூலம் தனது காத இச்சைகளை தீர்த்துக் கொள்வது ரொபின்ஸன் குமாரின் மற்றுமொரு தந்திரோபாயமாகும். இதனால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. 

ரொபின்ஸன் குமார் செய்த திருட்டு வேலைகளின் பட்டியல் பின்வருமாறு, 

பெயர் - அசோக் குமார் என்ற திருட்டு ரொபின்ஸன் குமார் 

1980ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து திருட்டுத்தனமாக பொருட்களை கடத்திவந்து விமான நிலையத்தில் சிக்கினார்

1996ம் ஆண்டு ரொபின்சன் குமாரின் மனைவி இந்து, இந்தியாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்து விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டார் 

1996ம் ஆண்டு ரொபின்ஸன் குமார் தனது சகோதரர் ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதனை செலுத்த தவறியதால் தனது சொந்த சகோதரர் என்றுகூட பார்க்காமல் குண்டர்களை வைத்து அவரை தாக்கி அச்சுறுத்தி குடும்பத்துடன் இந்தியாவிற்கு விரட்டினார். 

1998ம் ஆண்டு ரொபின்ஸன் குமார் இந்தியாவில் இருந்து தங்கம் கடத்திவந்து விமான நிலையத்தில் பிடிபட்டார். 

2014ம் ஆண்டு ரொபின்ஸன் குமாரும் அவரது நண்பர் கணேசனும் இலங்கையின் பிரபல வங்கி ஒன்றில் நூதன முறையில் 140 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையடித்து மாட்டிக் கொண்டனர். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. 

கணேசன் மெய்யப்பன் செட்டியார் என்ற வர்த்தகருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதனை திருப்பிச் செலுத்த தவறியதால் குண்டர்கள் மூலம் கணேசனின் சொந்த வீட்டை அபகரித்தவர் இந்த ரொபின்ஸன் குமார். 

வத்தளையில் வசிக்கும் மற்றுமொரு வர்த்தகருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அவரையும் மிரட்டி அவரது வீட்டை கைப்பற்றியுள்ளார் இந்த ரொபின்ஸன் குமார். 

கிருளபனை மயூராபதி ஆலயத்தின் பொருளாளர் சபை உறுப்பினராக இருந்து குறித்த ஆலயத்திற்கே வட்டிக்கு பணம் கொடுத்து தற்போது ஆலயக வளாகத்தில் உள்ள காணி ஒன்றை கொள்ளையடிக்கும் திட்டத்தில் ரொபின்ஸன் குமார் தீவிரமாக இறங்கியுள்ளார். 

இதற்காக ரொபின்ஸன் குமார் பதில் பொலிஸ் மா அதிபரின் பெயரை விற்பதுடன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளை விலைக்கு வாங்கி தனது காரியத்தை சாதித்துக் கொள்ள முயற்சிக்கிறார். 

இவரது இந்த முயற்சியை முறியடிக்கும் நோக்கில் மயூராபதி ஆலய நிர்வாக சபைத் தலைவர் ரொபின்ஸன் குமாருக்கு எதிராகவும் பணத்திற்காக இவருக்கு துணைபோகும் பொலிஸாருக்கு எதிராகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 
 

எனவே இந்த 'திருட்டு ரொபின்ஸன் குமாரிடம்' இருந்து அனைவரும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.