புதிய அரசியலமைப்பிற்காக தெளிவான அதிகாரத்தை கேட்கும் பெசில் (VIDEO)
Tuesday, 11 Aug 2020

புதிய அரசியலமைப்பிற்காக தெளிவான அதிகாரத்தை கேட்கும் பெசில் (VIDEO)

8 July 2020 04:16 pm

நாட்டிற்கு ஏற்றவாறு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான தெளிவான அதிகாரத்தை பெற்றுத்தருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (08) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மக்களின் நலனுக்காக நாட்டிற்கு ஏற்ற அரசியலமைப்பை உருவாக்க தெளிவான அதிகாரத்தை வழங்குமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது எதிர்பார்க்காத வகையில் கொவிட் 19 தொற்று நோய்க்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் தற்போது அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் இந்த ஆண்டு தேர்தலை முறையாக நிர்வகித்து வருவதால் மக்கள் சிறந்த முறையில் முடிவெடுக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

KK