பெசில் ராஜபக்ஷவின் இலங்கை வருகை காலவரையறையின்றி முடக்கம் !
Sunday, 23 Feb 2020

பெசில் ராஜபக்ஷவின் இலங்கை வருகை காலவரையறையின்றி முடக்கம் !

21 January 2020 04:40 pm

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மகளின் திருமண வைபவத்திற்கு கலந்துகொள்வதற்காக பெசில் ராஜபக்ஷ இந்த வாரத்தில் இலங்கைக்கு வருவதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் அந்த திகதிகளில் உறுதி இல்லாமல் மீண்டும் காலவரையறையின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட கடந்த டிசம்பர் வார தொடக்கத்தில் பெசில் அமெரிக்கா சென்றார்.

புதிய அரசாங்கம் பல துறைகளில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, அவற்றை நிவர்த்தி செய்யும்போது பெசில் ராஜபக்ஷவின் பற்றாக்குறையை அவர்கள் உணர்கிறார்கள். இருப்பினும், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அவர் இலங்கைக்கு வர விரும்புவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு வெளியே வேறொரு நாட்டிற்கு பயணம் செய்து வருவதாகவும், அவர் தொடர்ந்து இலங்கையின் அரசியல் நிலைமை குறித்த தகவல்களைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண அரசியல்வாதிகளைப் போலல்லாமல், 100 அரசியல்வாதிகளிடமிருந்து தனக்கு கிடைத்த 100 செய்திகளுக்கு பதிலளித்து, ஒரு சிறந்த அமைப்பாளராக மாறியவர் பெசில் ராஜபக்ஷ.