ரணிலின் தந்திரத்தில் சிக்கிய சஜித் குழு !
Sunday, 23 Feb 2020

ரணிலின் தந்திரத்தில் சிக்கிய சஜித் குழு !

21 January 2020 09:36 am

ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவம் சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக்கொள்வதற்காக சஜித் தரப்பு எவ்வித முயற்சியை மேற்கொண்டாலும் இறுதியாக நடைபெற்ற UNP சம்மேளனத்தில் அவர்களாலே ஏற்றுக்கொண்ட ஒரு திட்டத்தினால் ரணில் விக்கிரமசிங்கவை எக்காரணம் கொண்டும் கட்சி தலைமையில் இருந்து நீக்க முடியாத சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக UNP மகா சம்மேளனம் நடைபெற்றது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதற்காகவே. இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களில், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமனம் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான தலைமை ஆகியவை அடங்கும். இதற்கமைய கட்சி மகா சம்மேளனத்தினால் ரணிலை தொடர்ச்சியாக கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவரை எக்காரணம் கொண்டும் அந்த பதவியில் இருந்து நீக்க முடியாது. சஜித் தரப்புக்கு செய்ய கூடியது உத்தியோகபூர்வமற்ற வாக்கெடுப்பை நிகழ்த்தி பெறுபேறுகளை பேஸ்புக் மூலம் வெளியிட மட்டுமே.

இந்த நிலைமையின் பேரில் கட்சி தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒரே முறை ரணில் விக்ரமசிங்க ராஜினாமா செய்வது தான். இருப்பினும், அவர் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை, சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இதை அவர் தெளிவுபடுத்தினார். 

ரணிலின் தந்திரத்தில் சிக்கிய சஜித் குழு 

அரசியல் என்பது அதிகாரத்தைப் பெறுவதற்கும் அதை பராமரிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் ஒரு விளையாட்டு. இன்னும் துல்லியமாக, கூறினால் அது ஒரு மோதல். இதில் வெற்றிப்பெறுபவர் மிகவும் அனுபவம் வாய்ந்த, மிகவும் நுட்பமான, மிகவும் நுண்ணறிவுள்ள, மிகவும் தொலைநோக்குடைய ஒருவராவார்.

ரணிலின் அரசியல் குறித்து எங்களிடம் பல கேள்விகள் உள்ளன. ஆனால் இங்கு அதில் ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். அதாவது சஜித் தரப்பு இன்னும் இருப்பது ரணிலின் அரசியல் சதுரங்க விளையாட்டை புரிந்துக்கொள்ள முடியவில்லை. சஜித்தின் வேட்புமனுவைத் தாண்டி ஒரு அங்குலம் கூட பார்க்க சஜித் பிரிவு தவறிவிட்டது, அந்த அனுமதியுடன் ரணில் 2025 வரை தொடர்ந்து தனது தலைமையை பலப்படுத்திக் கொண்டார். சஜித்தின் தாயார் ஹேமா பிரேமதாசவை கையால் பிடித்துக்கொண்டு மேடைக்கு அழைத்து வந்த ரணில் அன்று சஜித் தரப் பினால், அவர் தனது தலைமையை உறுதிப்படுத்தினார். சஜித் தரப்பு அவரின் வலையில் சும்மாவே விழுந்துவிட்டது.

எனவே, ஒரு நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாகவோ அல்லது அரசாங்கக் கட்சியாகவோ எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சஜித் பிரிவு கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பது தெளிவாகிறது. குறைந்த பட்சம் தனது தலைவரை விட முன்னோக்கி செல்ல முடியாவிட்டாலும்  அவர் தனது தலைவரைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவராக இருக்க வேண்டும். 

இதுதான் சஜித் பிரிவு ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. அப்போதுதான் சஜித்தின் அரசியல் எதிர்காலம் பிரகாசமாகும். இல்லையெனில், எப்போதும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு அவர்கள் ஒரே இடத்தில் நிற்க வேண்டியதுதான்.