அசாம் அமீனுக்கு அரசாங்கம் ஏன் இவ்வளவு அஞ்சுகிறது?
Wednesday, 26 Feb 2020

அசாம் அமீனுக்கு அரசாங்கம் ஏன் இவ்வளவு அஞ்சுகிறது?

19 January 2020 10:46 pm

இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் குரல்பதிவு வெளியாகியுள்ளது. இம்முறை அதன் இலக்காக இருப்பது ஊடகவியலாளர் அசாம் அமீன். அசாம் அமீன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெறுப்புக்கு உள்ளது நேற்று இன்று இல்லை.

2018 அக்டோபர் 26 ஆட்சி மாற்றத்தின் போது மொட்டு அசாம் அமீனை சகித்துக்கொண்டமை தெளிவாகத் தெரிந்தது. 

பாராளுமன்ற பெரும்பான்மை கிடைக்காததாலும், பாராளுமன்றத்தை கலைக்கும் முயற்சி அரசியலமைப்பிற்கு விரோதமானது என்பதாலும், அனாதை ஆனா கட்சி உறுப்பினர்கள் அனைத்தையும் புறம் தள்ளி  அசாம் அமினின் சுதந்திரத்தை நொறுக்கத் தொடங்கினார்கள் என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது.

2019  ஏப்ரல் 21 குண்டு தாக்குதலின் பின் மொட்டின் உறுப்பினர்களின் பிரதான இலக்காக இருந்தது அசாம் அமீன் ஆகும்.  அவர்கள் அசாமின் தந்தை கூறிய கருத்தை தவறாகப் புரிந்துகொண்டு, கேலி செய்தார்கள்,  
அச்சுறுத்தினார்கள், அஸ்ஸாமின் தந்தை கூறியிருந்தது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கூறப்பட்ட ஒரு  கதையை அவர்கள் ஒரு சதத்திற்கேனும் கணக்கெடுக்கவில்லை.

அசாம் அமீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இடையே நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்பு உரையாடல் குரல்பதிவை 2020 ஜனவரி 18 அன்று அதாவது நேற்றையதினம்  அரசாங்கம் சமூக ஊடக வலையமைப்புகளுக்கு வெளியிட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல்

அந்த உரையாடலில் , அசாம் யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பேரணி பற்றி கூறியதுடன்,  அவர் அம்பாறையில் நடைபெற்ற பேரணி குறித்து ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேட்டுள்ளார். அதன்பின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேகாலை பேரணிக்கு வருகை தந்த ஊனமுற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை மூடிமறைக்க இடமளிக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.  இதனுடன் மொட்டின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு  தொடர்பு உள்ளது என ரஞ்சன் கூறும் போது அது தவறான தகவல்  என அசாம் சுட்டிக்காட்டியுள்ளார். டுவிட்டர் சமூக ஊடகத்தில் இருந்தது இவ்வளவு தான் என்பதுடன் யூடூபில் இருந்தது டுவிட்டரில் இருந்ததை விட நீண்டளவிலான குரல்பதிவு இருந்தது அதில் விஜித் விஜயமுனி சொய்சாவும் இதே உரையாடலில் ஈடுபட்டிருப்பதைக் காட்டியது. அந்த உரையாடலில் சஜித் பிரேமதாச கோட்டாபய ராஜபக்ஷவை பின்தள்ளி முன்னோக்கி இருப்பதாக விஜயமுனி சொய்சா கூறுகையில் அத்தகைய ஒன்றை பார்க்கவில்லை என அசாம் கூறுகிறார். இருப்பினும், உரையாடலின் முடிவில், அசாம் ரஞ்சனுக்கு சில அறிவுரைகளை வழங்குவதாகத் தெரிவதுடன் ஜேவிபியின் வாக்குகள் குறித்து உரையாற்ற வேண்டும் எனவும். அவ்வளவு தான்.  இதை வைத்து தான் அசாம் அமீனை அடக்க  முயற்சிக்கிறார்கள்.

அசாம் பிரச்சினையாக மாறியமை 

மொட்டின் அரசியல்வாதிகளுக்கு அசாம் அமீன் தலைவலியாகியுள்ளார். கொடுப்பதை உண்டு சொல்வதை எழுதாமல் அசாம் கேள்விகேட்பதால் ஆகும். விசேடமாக மொட்டில் ஒருவர் எழுதிக்கொடுக்கும் கேள்விகள் அல்லாமல் தனக்கு தேவையான கேள்விகளை மட்டும் தொடுப்பதால் ஆகும். அரசியல்வாதிகள் கூறும் பதிலை 'சரி  சார்' என்று கொடுக்கப்பட்ட பதில்களை ஏற்றுக் கொள்ளாமலும், பதிலுக்கு அவர்களிடம் கேள்வி கேட்பதாலும் தான். உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பந்துல  குணவர்தன ஒரு கேள்விக்கு பதிலளித்தார், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், ஒரு அங்குல நிலம் கூட வெளிநாட்டவர்களுக்கு இலவசமாக விற்கப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்ததுடன், அடுத்த வாரம் அசாம் வந்தது ஷகிரிலா இடத்திற்கான  பத்திரத்துடனே. பந்துலவுக்கு கூற பதில் இல்லாமல் போனது. இதனால் மொட்டு அரசியல்வாதிகள் அசாமுடன் கோபமடைந்தார். 

மொட்டின் தொண்டர்களுக்கு அசாமுடன் இருப்பது அதற்கும் மேலான வெறுப்பு. ஏனென்றால், நாட்டின் பெரும்பான்மையான ஊடகங்கள் மொட்டின்  அரசியல்வாதிகளின் முன்னால் வளைந்துகொடுக்கும் போது அசாம் அவ்வாறு செய்யவில்லை. நாட்டினுள் கலந்துரையாடப்படும்  தலைப்புகளில் அஸ்ஸாம் தனது முதலாளிகளை  நேரடியாக விசாரிக்கும் போது, பல சீடர்கள் அதை பொறுத்துக்கொள்வது கடினம். அதுதான் கதை.

நடிகர் நடிகைகளை பற்றி கிசுகிசு எழுதும் ஊடகவியலாளர்கள், அந்தரங்க பிரச்சனைகள் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு எழுதும் ஊடகவியலாளர்கள் இல்லாமல் அரசியல் தகவல்களை எழுதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வப்போது எம்.பி.க்கள் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள நேரிடும். மறுபுறம், பத்திரிகையாளர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு இடையே தனிப்பட்ட தொடர்புகள் ஏராளமாக உள்ளன. இத்தகைய உரையாடல்களில், அரசியல் ஆலோசனைகளைப் பரிமாறிக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவை மேஜிக் அல்ல. 

இருப்பினும், தங்கள் சொந்த கட்சியின்  பேரணிகளுக்கு வரும் பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது வழக்கமல்ல. அசாமை பழிவாங்க சென்று அரசாங்க காரர்கள் இறுதியில் தனது கட்சியில் உள்ள கற்பழிப்பாளர்கள் குறித்து மீண்டும் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது. அவர்களில் பிரபல பிரதேச சபை உறுப்பினரான சாருவா சுனிலுக்கு சிறு வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும், ஒரு கற்பழிப்பு சம்பவத்தை தலையில் போட்டுக்கொண்டது நல்லவிடயமே. இதற்கு முன்னதாக இந்த குரல்பதிவுகளின் மூலம் ஹிருனிகாவின் ஆடைகளை கழற்ற முயற்சித்தபோது ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரான திலீத் ஜயவீர போதை பொருள் வியாபாரம் செய்வதாக பரவியது. நாம் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளபடி,  அரசாங்கத்திற்குள் இருப்பது இத்தகைய நண்பர்கள் என்றால், அரசாங்கத்திற்கு வெளியே எதிரிகள் தேவையில்லை. 

இருப்பினும், அசாம் அமீனின் சுதந்திரத்தை தேடுவதற்காக மக்கள் இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்ததாக நாங்கள் கருதவில்லை. இந்த அரசாங்கம் ஒருபோதும் அத்தகைய வாக்குறுதியை அளிக்கவில்லை. விலைகளைக் குறைத்தல், எரிபொருள் விலை சூத்திரத்தை ஒழித்தல், உரங்களை இலவசமாக கொடுத்தல் , பினைமுறி  மோசடி செய்தவர்களை தண்டித்தல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டித்தல் போன்ற ஆயிரம் வாக்குறுதிகளை ஒதுக்கி வைத்து அசாம் அமீனை தூக்கிலிட இந்த  அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி நகைச்சுவையை விட சோகமயமானது.