அர்ஜுன ரணதுங்க கடைசி ஓவரில் ஆட்டமிழப்பாரா?
Friday, 10 Jul 2020

அர்ஜுன ரணதுங்க கடைசி ஓவரில் ஆட்டமிழப்பாரா?

14 October 2019 09:14 am

போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் சேர திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான இறுதி முடிவு அடுத்த சில நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்கத்தை கடுமையான  சிரமத்தில் உள்ளாக்கி 12 நாட்கள் தொடர் புகையிரத வேலைநிறுத்த போராட்டத்தை நடத்திய தருணத்தில் கூட அர்ஜுன ரணதுங்க அதற்கு தலையிடவும் இல்லை. நாட்டில் இருக்கவும் இல்லை. இவை அனைத்தையும் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க நிர்வகித்தார்.

அர்ஜுன ரணதுங்க சில காலமாக அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளார். இதற்குக் காரணம், இலங்கை போக்குவரத்து வாரியத்திற்கு  2000 பேருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை. அமைச்சர் இந்த திட்டத்தை அமைச்சரவையில் பலமுறை சமர்ப்பித்த போதிலும், அது பலமுறை நிராகரிக்கப்பட்டது, தான்  ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்  என்று பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.

இதற்கிடையில், அர்ஜுன ரணதுங்க தன்னுடன் இணைந்தால் அடுத்த போக்குவரத்து அமைச்சராகவும், 2000 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்புதலையும் பெற முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எனவே, அர்ஜுன ரணதுங்க அடுத்த சில நாட்களில் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார்.

நிலைமை இவ்வாறே நீடித்தால் 2014 நவம்பரில் இருந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சியுடன் இணைந்த உறுப்பினர்கள் வந்த வழியே திரும்பி செல்ல நேரிடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அன்று அவ்வாறு வந்த மைத்ரிபால சிறிசேன மற்றும் அதுரலிய ரத்ன தேரர் கடந்த வருடமே மீண்டும் சென்றதுடன், அடைந்த வாரத்தில் துமிந்த திஸாநாயக்கவும் சென்றுவிட்டார்.