UNPயை கெட்டவார்த்தைகளால் திட்டிய மைத்ரி- வெளியான ஒலிப்பதிவு

UNPயை கெட்டவார்த்தைகளால் திட்டிய மைத்ரி- வெளியான ஒலிப்பதிவு

15 September 2019 06:26 pm

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஐக்கிய தேசிய கட்சி தொடர்பாக ஆவேசமாக கெட்டவார்த்தைகளால் திட்டும் ஒலிப்பதிவு  ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருவதுடன், இது அண்மையில் உருவாக இருக்கும் மைத்ரி-சஜித் கூட்டணியை உடைக்க ஆரம்பிக்கப்பட்ட முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசாவின் ஊடக பிரிவுக்கு சொந்தமான எஸ்பிஜி மீடியா நெட்வொர்க் பேஸ்புக் பக்கத்தைப் போன்ற போலி பேஸ்புக் பக்கத்தில் இந்த ஒலிப்பதிவு பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பில் சேர்க்கப்பட்டது.

இந்த ஒலிப்பதிவு  சஜித் பிரேமதாசாவின் ஊடக பிரிவுக்கு சொந்தமான எஸ்பிஜி மீடியா நெட்வொர்க் (SPG Media Network) பேஸ்புக் பக்கத்தைப் போன்ற போலி பேஸ்புக் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பக்கத்திற்கு 168 லைக் மட்டுமே உள்ளது. இதற்கமைய இந்த பேஸ்புக் போலியான பக்கம் என தெளிவாக தெரிகிறது.

இந்த ஒலிப்பதிவு ஏற்கனவே வாட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்பில் பரவி வருகிறது.

இருப்பினும், ஜனாதிபதியும் சஜித் பிரேமதாசாவும் மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் இருவரும் விரைவில் ஒரு கூட்டணியைத் ஆரம்பித்து, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வார்கள் என்பது அரசியல் அரங்கில் இரகசியமல்ல.

இதற்கமைய இந்த ஒலிப்பதிவு சஜித் தரப்பினரால் பதிவிட்டதை போல சஜித்-மைத்ரி கூட்டணியை முறியடிக்கும் நோக்கில் மற்றொரு அரசியல் குழு சஜித்-மைத்ரிக்கு எதிராக சதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.facebook.com/SPGVoice/videos/vb.102634053507523/453399421925899/?type=2&theater