JVP யின் ஆதரவை கேட்க சென்று வாங்கி கட்டிய சஜித் குழு

JVP யின் ஆதரவை கேட்க சென்று வாங்கி கட்டிய சஜித் குழு

15 September 2019 05:11 pm

UNP ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை கேட்கும் சஜித் தரப்பிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய முதலாவது சவால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதாகும்.

கரு ஜயசூரியவை வேட்பாளராக பெயரிடுமாறு கோரும் தரப்பினருக்கு JVPயின் ஆதரவை பெறுமாறு பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்த நாட்களில் அதிக ஆர்வம் கொண்டுள்ள சஜித் பிரிவு, அவர்களும் ஜேவிபியின் ஆதரவைப் பெற முடியும் என்று கூறி கரு பிரிவுக்கு கொடுத்த சவாலை வலுக்கட்டாயமாக தனது பையினுள் இட்டுக்கொண்டனர்.

அதன்படி, சஜித் கட்சியின் பிரதிநிதி அரசியல் பணியகத்தின் ஜேவிபி உறுப்பினரை சந்தித்து ஜேவிபியின் ஆதரவைக் கோரினார்.

இதன்போது சஜித்தின் பிரதிநிதி தமக்கு ஆதரவு வழங்குமாறு ஜேவிபி பிரதிநிதியிடன் யோசனையை முன்வைத்து வாயை மூடும் முதலே ஜேவிபி பிரதிநிதி அதை கடுமையாக மறுத்துள்ளார்.

தனது கட்சியின் 60,000 சகோதர சகோதரிகளை ஆறுகளில் கொன்று டயர்களை எரித்த பிரேமதாசாவின் மகனுடன் எந்தவிதமான கொடுக்கல் வாங்கல்களும்  இல்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

போதும் என்ற அளவிற்கு வாங்கி கட்டிய சஜித் குழுவின் பிரதிநிதி ஒரு வார்த்தை கூட பேசாமல் அந்த இடத்தை விட்டு சென்றதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.