தலைமை மீது நம்பிக்கை இல்லை - மற்றொரு SLFP குழு மொட்டிற்கு
Saturday, 06 Jun 2020

தலைமை மீது நம்பிக்கை இல்லை - மற்றொரு SLFP குழு மொட்டிற்கு

15 September 2019 11:48 am

நாளுக்கு நாள் உடைந்து விழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ள தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை மீது நம்பிக்கை வைத்து தமது அரசியல் எதிர்காலத்தை பணயம் வைக்க முடியாது என தெரிவித்தே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கமைய அடுத்த சில நாட்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் துணை தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா மொட்டின் உறுப்பினராகுவதற்கு தயாராகி வருவதுடன் அவருடன் ஸ்ரீ.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மொட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் விலகிக்கொண்டிருக்கிறார்கள்.

நிமல் சிறிபாலா டி சில்வா, சமீபத்திய கட்சியின் சம்மேளனத்தின் போது  மொட்டுடன் சேருவதாக பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார், மொட்டுடன்  சேருவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

கட்சி சார்பாக நேரடி அரசியல் முடிவுகளை எடுக்க கட்சித் தலைமை தவறிவிட்டது என மொட்டுடன் இணைவதற்கு தயாராகியிருக்கும் உறுப்பினர்கள் தெரிவிகின்றனர்.

க.கி