மொட்டிற்கு சவால் விடகூடிய அறிவு சஜித்திற்கு இல்லை- பிரதமர்
Wednesday, 26 Feb 2020

மொட்டிற்கு சவால் விடகூடிய அறிவு சஜித்திற்கு இல்லை- பிரதமர்

25 August 2019 10:27 pm

UNP  ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதில் மேலும் நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. இந்த நெருக்கடியை எதிர்கொண்டு சஜித் பிரேமதாச பிரிவு தனது பிரச்சாரத்தைத் தொடர்கிறது. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக 55 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட ஆவணம் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர பிரதமர் அதற்கு பதிலளிக்கவில்லை.

இதற்கிடையில், சஜிதா பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக மாற்ற அவரது குழு இன்னும் போராடி வருகிறது.

இரண்டு மூன்று இடங்களில் வேட்பாளர் வேட்டை நடைபெற்றாலும், சஜித்க்கு என்றால் வழங்க மாட்டேன் என பிரதமர் தனது மனதுக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச இந்த ஜனாதிபதி தேர்தலை கையாள முடியாது என இப்போதே காட்டியுள்ளார் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜன ஹமுவ மற்றும் அவரின் கம்உதான நிகழ்ச்சிகளில் அவர் சொல்வது அவரது திறனின் அளவைக் காட்டுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

"சஜித் என்ன சொல்கிறான்? இவன் இப்படி பேசினால் வெற்றி பெறுவது மட்டுமல்ல வெற்றி பெறுவதை கூட நினைக்க முடியாது" என பிரதமர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கட்சியின் உத்தியோகபூர்வ ஒப்புதல் இல்லாமல் வேட்புமனுவைப் பெறுவதற்கான தனித் திட்டத்தை சஜித் பிரேமதாச இப்போது தொடங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் மொட்டிற்கு  சவால் விட கூடிய  அரசியல் அறிவு சஜித் பிரேமதாசாவிடம் இல்லை என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

க.கி