சட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா?
Monday, 16 Dec 2019

சட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா?

21 July 2019 06:48 pm

பன்னிப்பிட்டிய, தேவுரம் வெஹெர விகாரை பொறுப்பதிகாரியான சிறி சுமங்கள தேரரை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் தயாராகி வருவதாக குறிப்பிடப்படுகிறது.

சுமங்கள தேரர் சட்டவிரோதமாக யானைகளை தடுப்பு காவலில் வைத்திருப்பதாக  குற்றம்சாட்டப்பட்டே அவர் கைது செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதற்கமைய அவரை கைது செய்வதற்கான சாட்சிகள் போதுமானதாக உள்ளதால் தமது அறிவுறுத்தல்களின்படி செயல்பட சட்டமா அதிபர் CIDக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இந்த விசாரணை மற்றும் தேரர்கள் தொடர்பாக தற்போது சமுதாயத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக, இதுபோன்ற முடிவுகளை எடுப்பது நல்லதல்ல என CIDயினர் சட்டமா அதிபருக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எனினும் சட்டமா அதிபர் சிஐடியின் இந்த அறிவுறுத்தலை  கேட்கத் தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் இந்த நடவடிக்கை காரணமாக CID நெருக்கடியை எதிர்கொள்வதுடன், சட்டமா அதிபரின் கட்டுப்பாடற்ற நடத்தை நாட்டின் உயர்மட்ட நாற்காலிகள் வெப்பமடைய காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. 

KK