நாங்கள் ஏன் தமிழ் கற்க வேண்டும்
Monday, 27 Jan 2020

நாங்கள் ஏன் தமிழ் கற்க வேண்டும்

17 July 2019 08:06 pm

தாம் தமிழ் மொழியைக் கற்க வேண்டிய அவசியமில்லை என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் வேற்று இனத்தவர்களுக்கு சிங்களம் கற்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நான் இதனை நேரடியாகவே அம்பலப்படுத்துகின்றேன், நாட்டில் 70 வீதம் சிங்களவர்கள் இருக்கின்றார்கள் ஏனைய இனத்தவர்களிலும் 25 வீதமானவர்களுக்கு சிங்கள மொழி தெரியும், மிகுதியாக உள்ள 5 வீதத்திற்கு சிங்களம் கற்பிப்பது சுலபமா அல்லது 70 வீதமானவர்களுக்கு தமிழ் கற்பிப்பது சுலபமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் இந்தக் கருத்தானது பாரதூரமானதாகும் ஏனெனில் 1956ல் மொழிப் பிரச்சினையே பாரிய குழப்ப நிலைமைகளுக்கு ஏதுவாக அமைந்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.