ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைத் தேர்தல்
Monday, 27 Jan 2020

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைத் தேர்தல்

17 July 2019 10:18 am

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, தற்பொழுது இயங்கி வரும் ஊவா மாகாணசபையையும் கலைத்து அனைத்து மாகாணசபைகளினதும் தேர்தலை ஒரே நாளில் நடாத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ஊவா மாகாணசபையின் பதவிக் காலம் பூர்த்தியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கட்சிகள் தங்களது பலத்தை நிரூபித்துக் கொள்ள இந்த மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.