நாடு திரும்புவதா இல்லையா என்பது குறித்து கோதா மந்திராலோசனை
Wednesday, 20 Jan 2021

நாடு திரும்புவதா இல்லையா என்பது குறித்து கோதா மந்திராலோசனை

17 July 2019 10:07 am

நாடு திரும்புவதா இல்லையா என்பது குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச நாடு திரும்புவது குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோதபாய சிங்கப்பூரில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருவதாகத் தெரipவிக்கப்படுகிறது.
கோதபாயவின் பெற்றோருக்கான நினைவுத்தூபி நிர்மானத்தின் போது பாரியளவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடிகளுடன் கோதபாயவிற்கு நேரடித் தொடர்பு உண்டு எனக் குற்றம் சுமத்தியே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நீதிமன்றில் அனுமதி பெற்றுக் கொண்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும் கோதபாய ராஜபக்ச, எப்பொழுது நாடு திரும்ப வேண்டும் என்பது குறித்து சட்டத்தரணிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.