டொக்டர் சாபீ தொடர்பில் விசாரணை நடத்தும் குழு பக்கச்சார்பானது
Friday, 24 Jan 2020

டொக்டர் சாபீ தொடர்பில் விசாரணை நடத்தும் குழு பக்கச்சார்பானது

12 July 2019 09:12 pm

டொக்டர் சஹாப்டீன் சாபீ தொடர்பில் விசாரணை நடத்தும் குழு பக்கச்சார்பானது என தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள பௌத்த தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக டொக்டர் சாபீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவினை குருணாகல் நீதவான் சம்பத் காரியவசம் ரத்து செய்துள்ளார்.

இந்த குழுவிற்கு பதிலாக மலர்மொட்டு கட்சிக்கு சார்பான பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் ஹேமந்த தொடம்கொட உள்ளிட்ட சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவருக்கு எதிராக முதலில் முகநூலில் கருத்து வெளியிட்டவரே இந்த சன்ன ஜயசுமன என்ற பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.